ஆந்திராவில் கோவில் புனரமைப்பு பணிகளின் போது பழங்கால வெள்ளி நாணயங்கள் கண்டெடுப்பு..!

0 2397

ந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட பழங்கால வெள்ளி நாணயங்கள் கிடைத்துள்ளது.

உம்மடிவரம் கிராமத்தில் உள்ள மாசம்மா கோயிலை புனரமைப்பதற்காக மண் தோண்டப்பட்ட போது மழை பெய்ததால் சேற்றில் வெள்ளி நாணயங்கள் புதைந்திருப்பது தெரிய வந்தது. அங்கிருந்த கிராம மக்கள் கையில் கிடைத்த 500 க்கும் மேற்பட்ட நாணயங்களை வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

தகவல் அறிந்து வந்த தாசில்தார் பழங்கால நாணயங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அச்சிடப்பட்ட இந்த வெள்ளி நாணயங்களை கிராம மக்களிடம் இருந்து மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments