இங்கிலாந்தில் ஜி7 தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு..! காணொலி வாயிலாகப் பங்கேற்று நாளை உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோடி

0 1706

ங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் நாளையும், நாளைமறுநாளும் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார்.

இந்த கூட்டமைப்பில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கார்ன்வாலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மோடிக்கு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் மோடி இதில் பங்கேற்க போவதில்லை என்று வெளியுறவுத்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments