சிரிப்பதற்காக எடுக்கப்பட்ட வீடியோவால் சிறைக்குச் சென்ற இளைஞர்... விளையாட்டு வினையாகும்..!

0 5622

இங்கிலாந்தில் சமூக வலைதளத்தில் வைரலாகுவதற்கு இளைஞர் செய்த செயல் இறுதியில் அவரையே சிறைக் கம்பியை எண்ணும் நிலைக்கு தள்ளியது.

லிவர்பூல் நகரில் ஓடும் உறைபனி ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த 74 வயது முதியவரை இளைஞர் ஒருவர் பின்னால் இருந்து எட்டி உதைத்து தள்ளி கிண்டல் செய்து சிரிப்பது போன்று வீடியோ வெளியாகி வைரலானது.

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் விரும்பத்தகாத செயலில் ஈடுபட்ட இளைஞருக்கு 10 வாரங்கள் சிறைத் தண்டனை மற்றும் 500 பவுண்டுகளை அபராதமாக விதித்து உத்தரவிட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments