மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு இஎஸ்ஐ வசதி :மத்திய அரசு உத்தரவு

0 1608
மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு இஎஸ்ஐ வசதி :மத்திய அரசு உத்தரவு

நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த பணியாளர்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நிரந்தர பணியில் இல்லாததால், அவர்கள் சமூக பாதுகாப்பு திட்ட வரம்புக்குள் வராமலே இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க அவர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு வசதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக உரிய அறிவிப்பாணை வெளியிடுமாறு அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments