இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் யோகி ஆதித்யநாத்..!

0 1706

பிரதமர் மோடியை டெல்லியில் இன்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேச உள்ள நிலையில் அம்மாநிலத்தின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த ஊகங்கள் எழுந்துள்ளன.

உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜித்தின் பிரசாதா பாஜகவில் இணைந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்கிறது. இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு வந்த யோகி நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

தொடர்ந்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவையும் யோகி சந்தித்தார். அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கான பாஜக தேசியத் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments