அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகை மளிகைப் பொருட்களுடன் 2 ஆயிரம் ரூபாய்..! வீடு வீடாக டோக்கன்கள் வழங்கும் பணி இன்று தொடக்கம்

0 3140
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகை மளிகைப் பொருட்களுடன் 2 ஆயிரம் ரூபாய்..! வீடு வீடாக டோக்கன்கள் வழங்கும் பணி இன்று தொடக்கம்

ரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் இரண்டாம் தவணை கொரோனா சிறப்பு நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

ரேஷன் கடை ஊழியர்கள் 14ந் தேதி வரை வீடு, வீடாகச் சென்று டோக்கனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன்கடைகளுக்குச் சென்று பணம் மற்றும் மளிகைப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். 2 கோடியே 11 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வழங்கப்பட்ட டோக்கன்களில் 11-ம் தேதிக்கு முந்தைய தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோன்று வினியோகம் செய்யப்பட்ட டோக்கன்களில் தேதி மாற்றப்பட்டு மளிகைப் பொருட்கள், கொரோனா நிவாரணத் தொகை ஆகியவை வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments