”சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த சிங்கார சென்னை 2.0 திட்டம்” -சென்னை மாநகராட்சி முடிவு

0 4732

சிங்கார சென்னை திட்டத்தை புதுப் பொலிவுடன் மீண்டும் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த போது தொடங்கப்பட்ட சிங்கார சென்னை திட்டம் நாளடைவில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகரை அழகாக மாற்றும் வகையில் வித்தியாசமான அம்சங்களுடன் சிங்கார சென்னை 2.0 திட்டம் தயாராகியுள்ளது. கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி, விளையாட்டு, சுகாதாரத்தை பேணும் வகையிலும் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளன.

குறிப்பாக, பிராஜக்ட் புளூ’ என்ற பெயரில் கடற்கரைகளை அழகுபடுத்தவும், நீர் விளையாட்டுகளை கொண்டு வருவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உருவாக்கவும், செல்லப் பிராணிகளுக்கு பூங்கா, மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வசதிகள், மின்னணு வாகன போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள், நிதி ஆதாரம் உள்ளிட்டவை வரும் சனிக்கிழமை ஆலோசிக்கப்படவுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments