ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மணிப்பூரை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார்

0 2345

1998 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மணிப்பூரை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார். அவருக்கு வயது 42.

கடந்த வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட அவர், 2018 ஆம் ஆண்டு முதல் கல்லீரல் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். அற்காக தனது வீட்டையே விற்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். டிங்கோ சிங்குக்கு 1998ல் அர்ஜுனா விருதும், 2013ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. டிங்கோசிங் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments