”ஆக.2 முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸின் 2020 ஆம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு” -யுபிஎஸ்சி

0 2792
”ஆக.2 முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸின் 2020 ஆம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு” -யுபிஎஸ்சி

ஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸின் 2020 ஆம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும், இதற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவேற்றப்படும் என யுபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments