”கொரோனா பரவல் சங்கிலி உடைப்பு முயற்சியில் ஓரளவு வெற்றி” -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0 2793

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள ஏழை - எளிய மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைப் போக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கடுமையான உழைப்பினால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் சங்கிலியை உடைக்கும் முயற்சிக்கு ஓரளவு நல்ல பலன் கிடைத்திருப்பதாக அறிக்கையொன்றில் அவர் கூறியுள்ளார்.

திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது முழுக்க முழுக்க அரசு முறை பயணம் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, தம்மை சந்திக்க முயலுவதோ அல்லது வரவேற்பு அலங்காரம் அமைக்கக் கூடாது என்றும் திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments