ஹைதராபாத்தில் இருந்து 95,120 டோஸ் கோவாக்சின் சென்னை வந்தது

0 2525

கடும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், ஹைதராபாத்தில் இருந்து 95 ஆயிரத்து 120 டோஸ்கள் கோவாக்சின் தடுப்பு மருந்து சென்னை வந்தடைந்தது.

மத்திய தொகுப்பில் இருந்து மாநிலத்துக்கு தேவையான தடுப்பூசிகள் உரிய நேரத்தில் வந்துசேராததால், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கடுமையான தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு, 36 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து 95,120 டோஸ்கள் தடுப்பூசி சென்னை வந்தடைந்தது. இதில் 85,000 டோஸ்  தடுப்பூசி மாநில அரசின் சுகாதாரத்துறைக்கும், எஞ்சியவை தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments