ஆற்றில் குளிக்க சென்று அடித்து செல்லப்பட்ட இளைஞர்... இரண்டாவது நாளாக தேடி வரும் தீயணைப்பு துறையினர்!

0 2670

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த திருச்சோபுரம் பகுதியில் உள்ள ஆசாரி தெருவை சேர்ந்தவர் மதன் என்கிற மாணிக்கராஜ் .

இவர் மாலை அப்பகுதியிலுள்ள உப்பனாறு பாலம் அருகே தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். குளித்து கொண்டிருந்தபோது திடீரென மதன் நீரில் மூழ்கி காணாமல் சென்றுள்ளார். அப்போது இவருடைய நண்பர்களான சஞ்சய் மற்றும் அரிகிருஷ்ணன் ஆற்றுப்பகுதியில் கூச்சலிட்டு தனது நண்பனை தேடி பலமுறை கூச்சலிட்டனர்.

ஆனாலும் இவரது நண்பர் மதன் கிடைக்கவில்லை. நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து நண்பர்கள் இருவரும் மதனின் தந்தை மணிவண்ணனிடம் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து, மதனின் தந்தை புதுச்சத்திரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தகவல் அளித்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மதனை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments