ராங் ரூட்டில் வந்து ராங்காக பேசி காவலருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்..!

0 3268

சென்னை கோயம்பேட்டில் விதியை மீறி வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்த போலீசாரை அந்த வாகன ஓட்டி, ஒருமையில் பேசி மிரட்டியதோடு, தாக்க முயன்ற சம்பவம் அரங்கேறியது.

ஊரடங்கில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசாரிடம் சிலர் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோயம்பேட்டில் விதியை மீறி ஒருவழிபாதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டியை, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார்.

விசாரணைக்கு உரிய பதிலளிக்காத அந்த இருசக்கர வாகன ஓட்டி, காவலரை ஒருமையில் பேசி மிரட்டியதோடு, தாக்கவும் முற்பட்டார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற வாகன ஓட்டியை வாகன பதிவெண்ணை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments