இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2ஆவது நாளாக சற்று அதிகரிப்பு

0 5054

நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2ஆவது நாளாக சற்று அதிகரித்துள்ளதோடு, இதுவரை இல்லாத அளவாக ஒரு நாள் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 148 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 94 ஆயிரத்து 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 51 ஆயிரத்து 367 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பீகாரில் விடுபட்ட கொரோனா பலி  எண்ணிக்கை சுமார் 4 ஆயிரம் சேர்க்கப்பட்டதால், நாடு தழுவிய பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 148 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 67 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியை நெருங்குகிறது. மாநிலவாரியாக தினசரி பாதிப்பு அடிப்படையில், 17,321 பேருக்கு உறுதி செய்யப்பட்டு தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 15 ஆயிரத்து 204 பேருக்கு உறுதி செய்யப்பட்டு கேரளம் இரண்டாமிடத்திலும், 10 ஆயிரத்து 989 பேருக்கு உறுதி செய்யப்பட்டு மகாராஷ்டிரம் மூன்றாமிடத்திலும்  உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments