டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய 108 ஆம்புலன்ஸ்... சாலையோர மரத்தில் மோதி கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

0 3219

கள்ளக்குறிச்சி அருகே டயர் வெடித்து நிலை தடுமாறிய 108 ஆம்புலன்ஸ் சாலையோர மரத்தில் மோதிய கோர விபத்தில், கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண், பிரசவத்துக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆம்புலன்சில் ஜெயலட்சுமியுடன் அவரது மாமியார் செல்வி, உறவினர் அம்பிகா ஆகியோர் சென்றுள்ளனர்.

ஆலத்தூர் அருகே வந்தபோது ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர்களில் ஒன்று வெடித்ததாகக் கூறப்படுகிறது. நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ், சாலையோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.  இதில் கர்ப்பிணிப் பெண் ஜெயலட்சுமி, செல்வி, அம்பிகா என மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர், செவிலியர், உதவியாளர் என 3 பேர் படுகாயமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments