கொரோனா விழிப்புணர்வுக்காக பத்ரகாளி வேடமிட்ட காவல் ஆய்வாளர்... நூதன பிரச்சாரம்..!

0 1916

நாகையில் காவல் ஆய்வாளர் பத்ரகாளி வேடமிட்டு கொரோனாவைக் கொல்வது போல் நூதன பிரச்சாரம் மேற்கொண்டார். 

தன்னார்வலர்கள் சிலர் கொரோனா வைரஸ் போல வேடம் பூண்டு, கடைவீதிகளில் வலம் வந்தனர். முகக்கவசம் அணியவில்லை என்றால் உங்களைப் பிடித்துக் கொள்வோம் என்பது போல அவர்கள் பாவனை செய்தனர். சிறிது நேரத்தில் கொரோனா வைரசை அழிக்க காளி வேடம்பூண்டு வந்தார் ஆய்வாளர் பெரியசாமி.

முகக்கவசம் அணிவதும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதோடு அவ்வப்போது கைகளைக் கழுவுவதும்தான் கொரோனா அரக்கனைக் கொல்ல வழி எனக் கூறியவாறு கொரோனா வைரஸ் வேடம் பூண்டவர்களைக் கொல்வது போல் அவர் பாவனை செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments