குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

0 3253

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கையில் பல்ஸ் ஆக்சிமீட்டருடன் ஆறு நிமிடங்களுக்கு நடக்க வைத்து பரிசோதனை செய்வது போன்ற சில வழிகாட்டல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகள் இயக்குனரகமான DGHS வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில், அறிகுறி இல்லாத அல்லது லேசான பாதிப்புடையவர்களுக்கு ஸ்டெராய்டு மருந்துகள் தீங்கு விளைவிப்பதால் மருத்துவர் கண்காணிப்பு இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சரியான அளவில் ஸ்டெராய்டு மருந்துகள் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற ரெம்டிசிவர் மருந்து குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதின்பருவ பிள்ளைகளுக்கு இருமல் இருந்தால் வெந்நீரால் வாய்க் கொப்பளித்தல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 10 முதல் 15 மில்லிகிராம் டோஸ் பாரசிட்டமால் மாத்திரைகளை 4 அல்லது 6 மணி நேர இடைவெளியில் தரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆக்சிஜன் தெரபி தரப்படவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments