மும்பையின் மலாட் பகுதியில் கனமழையால் இடிந்து விழுந்த பழைய கட்டடம்... 11 பேர் உயிரிழப்பு

0 2035

மும்பையின் மலாட் பகுதியில் உள்ள மால்வானியில் ஒரு பழைய கட்டடம் இடிந்து விழுந்தது.

இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள் பெண்கள் உள்பட 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருப்பதால் அங்கு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

மும்பையில் நேற்று கனமழை பெய்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கட்டடம் இடியும் நிலை இருப்பதாக எச்சரிக்கை விடுத்து அங்கிருந்த மக்களை வெளியேறும்படி எச்சரித்தனர். சிலர் வெளியே ஓடி வந்து நூலிழையில் உயிர்தப்பியதாக விவரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments