கொல்கத்தாவில் பஞ்சாபைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் இருவர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை

0 1589

கொல்கத்தாவில் போலீசாருக்கும் பஞ்சாபைச் சேர்ந்த ரவுடிகளுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல ரவுடி ஜெய்பால் புல்லார் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடமிருந்த 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், துப்பாக்கிகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை என்கவுண்ட்டர் நிகழ்ந்த இடத்தில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

2 காவல்துறை அதிகாரிகளை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்ட இரண்டு ரவுடிகள் கொல்கத்தாவில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பஞ்சாப் போலீசார் கொல்கத்தா போலீசாருடன் இணைந்து பிரபல ரவுடியான ஜெய்பால் புல்லாரையும் அவன் கூட்டாளி ஜஸ்பிரித்சிங்கையும் சுற்றி வளைத்த போது துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments