கட்சி உங்கள் சாய்ஸ் சின்னம்மா அழைப்பால் சிலிர்த்துபோன மாஜி அமைச்சர்..!

0 5651

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆனந்தனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து அவரது ஆதரவாளர்களை தவிப்புக்குள்ளாக்கிய சசிகலா, அடுத்த சில நாட்களிலேயே கோவில்களுக்குச் சென்று அப்படியே ஆதரவாளர்களையும் சந்தித்து வந்தார். தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில், தினம் ஒரு தொண்டருக்கு போன் செய்து நலம் விசாரிப்பதை சசிகலாவும், அது தொடர்பான ஆடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வதை அவர்களது ஆதரவாளர்களும் வாடிக்கையாக செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கருவாடு மீன் ஆகலாம் சசிகலா அதிமுகவில் சேரமுடியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடியாக தனது ஆதரவாளராக முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதை உணர்த்த, எண்ணிய சசிகலா தரப்பு அடுத்த ஆடியோ உரையாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த முறை சசிகலாவிடம் போனில் பேசும் வாய்ப்பை பெற்றவர் 1991-96 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கால் நடை, பால்வளம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த உளுந்தூர் பேட்டை ஆனந்தன். இவரை செல்போனில் அழைத்து நலம் விசாரித்த சசிகலாவிடம், நேற்றுக்கு வந்தவர்கள் அதிமுகவில் ஜெயலலிதாவுக்கே இடம் இல்லை என்று கூறிவிட்டார்கள் என்று ஆதங்கப்பட, ஆனந்தனிடம், நீங்கள் பழைய ஆளு நான் சீக்கிரம் வந்து விடுவேன், எல்லாத்தையும் பார்த்துக்கலாம் என்றும் கொரோனா சரியானதும் வீட்டுக்கே வந்து பார்ப்பதாகவும் சசிகலா கூறினார்

கட்சி கண்ணுக்கு எதிரே இப்படி ஆகுதேன்னு மனசுக்கு கஷ்டமாக இருக்குன்னு கூறிய சசிகலா தொண்டர்களுக்காக நிச்சயம் வருவேன் என்று கூறியதோடு கவலைவேண்டாம் என்றும் தெரிவித்தார்

4 நிமிடங்கள் 51 வினாடிகள் கொண்ட இருவரது உரையாடலில், எந்த ஒரு இடத்திலும், எந்த இரு கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல் அம்மா, தலைவர் என்று மட்டும் மிகவும் கவனமாக உரையாடியது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலம் என்பதால் வீட்டில் ஓய்வில் இருக்கும் சசிகலா தங்களையும் அழைப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments