ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..! கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார்

0 3031
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..! கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார்

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைசர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

தமிழக சட்டப் பேரவை வருகிற 21-ந் தேதி கூடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இதுவாகும். இந்த நிலையில், சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றக் கூட்டத்தொடர் குறித்து கலந்தாலோசித்ததோடு, பேரவையில் உரையாற்ற முறைப்படி அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் ஆளுநர் பன்வாரிலால் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments