ஜூன் 11ல் கல்லணைக்கும், 12 அன்று மேட்டூருக்கும் ஆய்வு செய்ய செல்கிறார் முதலமைச்சர்..!

0 2627

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 11ஆம் நாள் கல்லணைக்கு சென்று ஆய்வு செய்வதுடன், 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடவும் உள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சிக்குச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து காரில் கல்லணைக்குச் செல்கிறார். அணையைப் பார்வையிடுவதுடன் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணிகள், மதகு சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

சனிக்கிழமை சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்குச் செல்லும் முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின் பத்தரை மணியளவில் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து விடுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments