ஐஏஎஸ் அதிகாரிகள் 25 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!

0 4511

துரை, சேலம், திருப்பூர், நெல்லை மற்றும் கோவை மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மொத்தம் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை ஆணையாளராக கே.பி. கார்த்திகேயன், சேலம் ஆணையாளராக கிறிஸ்துராஜ், திருப்பூர் ஆணையராக கிரந்தி குமார், நெல்லை ஆணையராக விஷ்ணு சந்திரன், கோவை ஆணையராக ராஜ கோபால் சுங்கரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன், சென்னை மாநகராட்சிக்கு  3 ஐஏஸ் அதிகாரிகள்  துணை ஆணையர்களாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 17 இளநிலை ஐஏஎஸ்அதிகாரிகள் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments