முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

0 1929

முன்னாள் மத்திய அமைச்சரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகவும் இருந்த ஜிதின் பிரசாதா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளார்.

உத்தரப்பிரதேச காங்கிரசில் பிராமண வகுப்பினரின் அடையாளமாகச் செயல்பட்டு வந்த அவர், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

காலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய ஜிதின் பிரசாதா பிற்பகலில் பாஜக தலைமையகத்தில் அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

அதன்பின் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்தார். காங்கிரசில் தொடர்ந்து இருந்தால் மக்கள் நலனைக் காக்கவும், மக்களுக்கு உழைக்கவும் முடியாது என்பதை அறிந்ததால் பாஜகவில் சேர்ந்ததாக ஜிதின் பிரசாதா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments