கொரோனா தடுப்பூசி சான்றிதழில் தனிநபர் தவறுகள் ஏதேனும் இருந்தால்? சரி செய்வதற்கான புதிய வசதி அறிமுகம்

0 2831
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் தனிநபர் தவறுகள் ஏதேனும் இருந்தால்? சரி செய்வதற்கான புதிய வசதி அறிமுகம்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் தனிநபர் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதை சரி செய்வதற்கான வசதி, CoWin இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் விகாஷ் ஷீல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன்படி பெயர், பிறந்த ஆண்டு, இனம் உள்ளிட்டவை தடுப்பூசி சான்றிதழில் தவறாக பதிவாகி இருந்தால் http://cowin.gov.in என்ற இணையதளத்தில் சென்று சரி செய்யலாம்.

இந்த தகவல் ஆரோக்கிய சேது செயலியின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments