கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் குழு அமைப்பு..!

0 1893
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் குழு அமைப்பு..!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட நலத் திட்டங்களை செயல்படுத்த வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை, அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை. பட்டப் படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசு செலுத்தும்.

தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம், உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகைஉள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை கடந்த மாதம் 29-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்த நிதித்துறைச் செயலாளரை தலைவராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் இக்குழு கூடி ஆலோசனை நடத்தியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments