"ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்க கூடாது" -தமிழ் நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 2752

மிழ் நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்க கூடாது என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் மலைப்பகுதி கட்டிடங்கள் சட்ட விதிகளை மீறி, மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர் கட்டும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்து வனத்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே, நடுவட்டத்தில் வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை அடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. கட்டப்படும் ரிசார்ட்டுக்கு, வனப்பகுதியில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடுக்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments