சென்னை வியாசர்பாடியில் பட்டாக்கத்தியுடன் ரவுடி அட்டகாசம்... வெளியான சிசிடிவி காட்சிகள்

0 15938

சென்னை வியாசர்பாடியில் ரவுடி ஒருவன் குடிபோதையில் பட்டாக்கத்தியோடு கடைக்குள் புகுந்து கண்ணாடியை உடைத்து மிரட்டியதோடு, அங்கு நின்று கொண்டிருந்த நபரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வியாசர்பாடியில் ஏஜென்ஸி ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் கருப்பசாமி, தனது டாடா ஏஸ் வாகனத்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பட்டாக்கத்தியுடன் வந்த ரவுடியான மகேஷ் என்பவன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கருப்பசாமியை தாக்கியதோடு, அவரது டாஸ் ஏஸ் வாகனத்தின் முன் பக்க கண்ணாடியையும் சேதப்படுத்தினான். பின்னர், அருகில் இருந்த இறைச்சி கடைக்கு சென்று கண்ணாடிகளை உடைத்து தாக்குதலில் ஈடுபட்டான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரவுடி மகேஷை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments