தடுப்பூசி போட்டுக் கொண்டால் கஞ்சா இலவசம்... விநோத முறையை கையாளும் வாஷிங்டன்

0 3618

அமெரிக்காவின் பல மாநிலங்கள், லாட்டரி உள்ளிட்ட பல  கவர்ச்சிகரமான பரிசுகளை தருவதாக கூறி மக்களை தடுப்பூசி போட அழைக்கும் நிலையில், வாஷிங்டன் மாநிலம் ஒரு படி மேலே போய் தடுப்பூசி போட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு ரவுண்டு கஞ்சா தருவதாக விளம்பரம் செய்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. வாஷிங்டன் மாநிலத்திலும் அதே நிலைமை தான் உள்ளது. எனவே முதலில் 6 வாரங்களுக்குள் தடுப்பூசி டோசுகளை போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக மது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வராததால் கஞ்சா வழங்கும் முடிவுக்கே அரசு வந்துள்ளது. 2012 முதல் அங்கு கஞ்சா விற்பனைக்கு சட்டபூர்வ அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments