தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு அதன்பின்னர் மத்திய அரசை குறை கூறலாம் - தமிழ்நாடு அரசுக்கு எல். முருகன் வலியுறுத்தல்

0 3891
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை முதலில் தமிழக அரசு நிறைவேற்றி விட்டு அதன்பின்னர் மத்திய அரசை குறை கூறலாம் என பாஜக தமிழ்நாடு தலைவர் எல். முருகன் கூறினார்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை முதலில் தமிழக அரசு நிறைவேற்றி விட்டு அதன்பின்னர் மத்திய அரசை குறை கூறலாம் என பாஜக  தமிழ்நாடு தலைவர் எல். முருகன் கூறினார்.

சென்னையில் ஒரு லட்சம் முககவசங்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை சுகாதாரத் துறைக்கு வழங்கிய பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் கொடுப்பதாக கூறியதை உடனடியாக கொடுக்க வேண்டும்  என அவர் வலியுறுத்தினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும் ஆனாலும் மக்களையும் மாணவர்களையும் ஏமாற்ற தமிழக அரசு முயற்சி செய்வதாக முருகன் கூறினார். சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் கல்வி தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்ற அவர், மாணவர்கள் கல்வியில் அரசியல் செய்யக்கூடாது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments