ஊரடங்கில் தளர்வு... தேவையின்றி வெளியே சுற்றும் மக்கள்... உயர்நீதிமன்றம் அதிருப்தி

0 6492

ஊரடங்கிலிருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பியதாக நினைத்து தேவையின்றி வெளியில் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர் தேவை குறித்து தாக்கலான மனு ஒன்றை விசாரித்த  தலைமை நீதிபதி அமர்வு, இது  கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை எனவும்  தெரிவித்தது. அசவுகரியங்களை குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை மக்கள் உணரும் வகையிலும், வெளியில் சுற்றித்தியக்கூடாது என ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

விசாரணையின் போது,விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக  சென்னை மாநகராட்சிக்கு 7 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும், பிற 14 மாநகராட்சிகளுக்கு 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments