பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர்... பரபரப்பு வீடியோ..!

0 2821

பிரான்சின் தென்கிழக்கில் உள்ள டிரோம் பகுதிக்கு சுற்றுப்பயணம் செய்த அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை பொதுமக்களில் ஒரு நபர் கன்னத்தில் அறைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபரை ஒரு நபர் கன்னத்தில் அறையும் அந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவுகிறது.

கொரோனாவுக்கு பிறகு நாடு எப்படி இருக்கிறது என அறிவதற்காக டிரோம் பகுதிக்கு வந்தார் இம்மானுவேல் மேக்ரோன்.

அப்போது இரும்பு தடுப்புகளுக்கு அப்பால் நிற்கும் மக்களை வணங்கியவாறு வந்த அதிபரை யாரும் எதிர்பாராத விதமாக நபர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2பேர் கைது செய்யப்ப்பட்டனர். அதிபரை அறைந்ததின் நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments