12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்..

0 3403

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

கணவனை இழந்த கூலி தொழில் செய்து வரும் பெண் தனது 12 வயது மகளுடன் வழக்கம் போல் அவரது குடிசை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் விஜயை பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments