பெங்களூருவில் கடந்த 2 மாதத்தில் 10 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

0 3703

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2 மாதத்தில்10 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா 2-வது அலைக்கு மத்தியில்  பெங்களூருவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரசவத்திற்காக ஏராளமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்களில் கொரோனா பாதித்த 17 கர்ப்பிணிகள் குழந்தை பெற்ற ஓரிரு நாட்களில் உயிர் இழந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இவற்றில் பெரும்பாலும் ஆபரேசன் மூலமாக குழந்தை பெற்றெடுத்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இதேபோல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 கர்ப்பிணிகள் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்‍. தாமதமாக சிகிச்சைக்கு வந்ததே இவர்கள் உயிர் இழப்புக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments