இமாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக படம் பிடிக்கப்பட்ட ராஜநாகம்

0 9673

இமாச்சலப் பிரதேசத்தில் ராஜநாகம் இருப்பது முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள விஷப் பாம்புகளில் மிகவும் பெரியது என்ற பெயரைக் கொண்டது ராஜநாகம். மற்ற பாம்புகளையே தனது உணவாகக் கொண்ட ராஜநாகம் அதிகபட்சம் 18 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. தனது ஒரே கடியில் 10 பேரை கொல்லும் அளவிற்கு அதன் விஷத்தின் வீரியம் இருக்கும் என கூறப்படுகிறது.

தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையிலும், அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் இந்தப் பாம்பு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் எல்லைப் பகுதியில் உள்ள பவோண்டா சாஹிப் என்ற இடத்தில் கோலார் வனப்பகுதியில் ராஜநாகம் இருப்பது முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு நடத்த வனத்துறையினர் விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments