செல்போன் சிக்னல் கிடைக்காததால் கல்லூரி மாணவர்கள் மலை உச்சியில் அமர்ந்து தேர்வெழுதும் அவல நிலை

0 2917

மிசோரம் மாநிலத்தில் கல்லூரி செமஸ்டர் ஆன்லைன் தேர்வு எழுத கிராமத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் கல்லூரி மாணவர்கள் மலைஉச்சிக்கு சென்று தேர்வு எழுதினர்.

Saiha  மாவட்டத்தில் அமைந்துள்ள Mawhrei என்ற மலைக்கிராமத்தில் ஆயிரத்து 700பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் படிக்கும் மிசோரம் பல்கலைக்கழகத்தில் தற்போது ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகிறது.

இந்த மலை கிராமத்தில் செல்போன் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் அனைவரும் சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சிக்கு நடந்து சென்று குடில் அமைத்து தேர்வு எழுதி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments