ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்த 37 வயது பெண்..!

0 10013

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த Gosiame Thamara Sithole என்ற 37 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்த அவர் கடந்த 7ந்தேதி பிரசவத்திற்காக Pretoria  நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நேற்று சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments