22 நோயாளிகளின் இறப்புக்கு காரணமான ஆக்ரா தனியார் மருத்துவமனைக்கு சீல்வைப்பு

0 4067

ஆக்ராவில் 5 நிமிடங்கள் ஆக்சிஜன் சப்ளையை துண்டித்து உயிரிழக்கக் கூடிய 22 நோயாளிகளை அடையாளம் காண மருத்துவமனை நிர்வாகம் முயற்சித்த விபரீதத்தையடுத்து மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது.அப்போது ஆக்ராவில் உள்ள மருத்துவமை ஒன்று 96 கொரோனா நோயாளிகளுக்கு அளித்து வந்த ஆக்சிஜன் சிகிச்சையை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது உயிருக்குப் போராடிய 22 நோயாளிகள்  உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையை சீல் வைத்து மூட உத்தரவிட்ட அரசு அங்கிருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது.ஆனால் நோயாளிகள் யாரும் இந்த பரிசோதனையால் உயிரிழக்கவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments