பிஞ்சிலே பழுத்து கஞ்சா குடிக்கியான 3 லிட்டில் பிரின்சஸ்..! புள்ளிங்கோவை நம்பி ரன்..!

0 10788

கோவை துடியலூரில் தடையின்றி விற்பனையாகும் கஞ்சாவுக்கு அடிமையான 3 மாணவிகளை,  இன்ஸ்டாகிராம் நண்பர்கள் திண்டுக்கலுக்கு கடத்திச்சென்று வீட்டில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொறுப்பற்ற பெற்றோர்களால் கஞ்சா போதைக்கு அடிமையான சிறுமிகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

கோவை துடியலூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அதே பகுதியைச் சேர்ந்த புள்ளிங்கோ சிறுவர்கள் சிலருடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார்.

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தடையின்றி விற்பனை செய்யப்படும் கஞ்சாவுக்கு அடிமையான அந்த புள்ளிங்கோக்கள், அந்த மாணவிக்கும் அவரது இரு தோழிகளுக்கும் போதைப்பொருளைக் கொடுத்து பழக்க, ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகி, நண்பர்களுடன் அந்த சிறுமிகள் இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 27 ந்தேதி முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், போலீசாரின் வாகன சோதனையை மீறி 3 சிறுமிகளையும் புள்ளிங்கோ நண்பர்கள் இரு சக்கர வாகனத்தில் வெளியூர் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே 28ந்தேதி துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு சிறுமியின் தந்தை, தனது மகளைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் அதனை விசாரிக்காமல் கிடப்பில் போட்டதாகக் கூறப்படுகின்றது.

அங்கிருந்து தப்பி வந்த இருந்து ஒரு சிறுமி, கஞ்சா போதைக் கும்பல் போதையில் தங்களிடம் வரைமுறையின்றி நடந்து கொண்டதாகவும், வீட்டில் அடைத்து வைத்து தனக்கு செய்த கொடுமை குறித்தும் பெற்றோரிடம் கண்ணீர் விட்டு கதறினாலும் அந்த சிறுமி தரப்பில் புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இருப்பினும் சிறுமி அளித்த தகவலின் பேரில் துடியலூர் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். மாயமான சிறுமியின் செல்போன் சிக்னலை வைத்தும், தப்பி வந்த சிறுமி சொன்ன அடையாளங்களை வைத்தும் திண்டுக்கல் தோமையார் புரம் மலைப்பகுதியில் ஒதுக்கு புறமாக இருந்த முகமது அலி ஜின்னா என்பவரது வீட்டில் இருந்த இரு புள்ளிங்கோ சிறுவர்களையும், ஒரு சிறுமியையும் செவ்வாய்கிழமை மீட்டனர்.

ஆனால் போலீசார் தேடிச்சென்ற சிறுமியை 22 வயது கஞ்சா ஆசாமி கோகுல்ராஜ் என்பவன் அங்கிருந்து கடத்திச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

திண்டுக்கல் காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட அந்த புள்ளிங்கோ சிறுவர்களிடமும், அடைக்கலம் கொடுத்த முகமது அலிஜின்னாவிடமும் போலீசார் தப்பி ஓடிய ஜோடி குறித்து விசரித்து வருகின்றனர்

தலையில் குளிர் குல்லாவுடன் 2 வதாக மீட்கப்பட்ட சிறுமி கஞ்சா சிகரெட் இழுத்து அதனை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புள்ளிங்கோ நண்பர்களுடனும் புகைபிடித்தபடி வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளார். இதனை அந்த சிறுமியின் பெற்றோர் எப்படி கவனிக்க தவறினர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வீட்டில் அளவுக்கதிமான செல்லமும் சுதந்திரமும் கொடுத்து லிட்டில் பிரின்ஸஸ் போல வளர்க்கப்படும் சிறுமிகள் தாங்கள் செய்வது தவறு என்பதை உணராமல் இது போன்று முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக கூடா நட்பில் விழுந்து தடம் மாறிச்செல்வதாக கூறப்படுகின்றது

தங்கள் மகள் பூட்டிய அறைக்குள், செல்போனில், சமூக வலைதளத்தில் என்ன செய்கிறார் ? யாருடன் பழகுகிறார் ? எங்கு சென்று வருகிறார்?என்பதை கூட கண்காணிக்காமல் அவரது பெற்றோர் இத்தனை நாட்களும் பொறுப்பற்று இருந்துள்ளதாக காவல்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்

அதே நேரத்தில் ஒவ்வொரு பகுதியிலும் தடையின்றி விற்கும் கஞ்சாவை அந்தந்த பகுதி காவல்துறையினர் கட்டுப்படுத்தினாலே இளஞ்சிறார்கள் போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதை தடுக்க முடியும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments