உத்தரப் பிரதேசத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு

0 1833

உத்தரப்பிரதேசத்தில் பேருந்தும், ஆட்டோவும் மோதிக் கொண்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

கான்பூர் அருகே உள்ள சச்சென்டி என்ற இடத்தில் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற பேருந்து, ஆட்டோ மீது மோதியது. இதில் சாலையின் மறுபுறம் ஆட்டோ தூக்கி வீசப்பட்டது.

பேருந்தும் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த 16 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்த பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர்களின் உயிரிழப்புக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments