தமிழகத்தில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் வரும் 14ம் தேதி முதல் பணிக்கு வர கல்வித்துறை அறிவுறுத்தல்

0 177816

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வரும் 14ஆம் தேதி முதல் பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கான மதிப்பெண், சான்றிதழ்கள், விலையில்லா பாடப்புத்தகங்கள், கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும், மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதை முன்னிட்டு பள்ளிவளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் சார்ந்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதிசெய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments