கிரிமினல்களின் செயலியை ஹேக் செய்து சர்வதேச போலீஸ் நடத்திய வேட்டை..! 18 நாடுகளில் குற்றச்செயல்களை அரங்கேற்றிய 800க்கும் மேற்பட்டோர் சிக்கினர்

0 3097
கிரிமினல்களின் செயலியை ஹேக் செய்து சர்வதேச போலீஸ் நடத்திய வேட்டை..! 18 நாடுகளில் குற்றச்செயல்களை அரங்கேற்றிய 800க்கும் மேற்பட்டோர் சிக்கினர்

ர்வதேச புலனாய்வு அமைப்புகள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில், பல நாடுகளில் இயங்கும் கிரிமினல் குழுவின் செயலி ஹேக் செய்யப்பட்டு, 18 நாடுகளில் குற்றச்செயல்களை நடத்தி வந்த நூற்றுக்கணக்கான கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் FBI நடத்திய , Operation Trojan Shield என்ற இந்த நடவடிக்கையில், சர்வதேச போதை மருந்து கடத்தலில் தொடர்புடைய பல குற்றவாளிகள், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 148 மில்லியன் டாலர் பணம் மற்றும் டன் கணக்கில் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிரிமினல் கும்பல்களின் மெசேஜிங் செயலியான An0m-ஐ அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் தங்களது கட்டுக்குள் கொண்டுவந்து அவர்களை பிடித்துள்ளனர்.

இந்த செயலி மட்டுமே உள்ள போனை ஆஸ்திரேலிய நிழல்உலக தாதா ஒருவன் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கிரிமினல்களுக்கு வழங்கி, அதன் மூலம் போதை மருந்து கடத்தல், வன்முறை,அப்பாவி மக்களை கொல்லுதல் உள்ளிட்ட கிரிமினல் சம்பவங்களை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments