தமிழகத்தில் 18ஆயிரமாக சரிந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 31,360 பேர் டிஸ்சார்ஜ்

0 3099

மிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 18ஆயிரமாக குறைந்துள்ளது. அதேசமயம், வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து023 பேருக்கு, புதிதாக வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 409 பேர் பலியாகியுள்ளனர்.

நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்து, ஒரே நாளில் 31,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கோவையில் 2ஆயிரத்து439 பேரும், ஈரேட்டில் ஆயிரத்து596 பேரும், சென்னையில் ஆயிரத்து437 பேரும், திருப்பூரில் 995 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மட்டும் 4 இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments