உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமங்களில், பிறப்பு, இறப்பு பதிவுக்கான காலதாமத கட்டணம் ரத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 3222

ள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமங்களில், கடந்த ஆண்டு ஒன்றாம் தேதி முதல் நடந்த பிறப்பு, இறப்பு குறித்த, காலந்தாழ்ந்த பதிவு விண்ணப்பங்களுக்காக வசூலிக்கப்படும் காலதாமத கட்டணத்தை, ரத்து செய்வதாக, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இந்த கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்துவதாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து அவர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் 100 ரூபாய் ஆகவும், 30 நாட்கள் முதல் ஓராண்டு வரை 200 ரூபாய் ஆகவும், ஓராண்டுக்கு மேல் 500 ரூபாயாகவும் உள்ள இந்த காலதாமத கட்டணத்தை விலக்குவதால் ஏற்படும் வருவாய் இழப்பை, தமிழக அரசே ஈடு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments