தமிழ்நாட்டிற்கு நாளை முதல் மத்திய தொகுப்பில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் வரத் தொடங்கும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 3166
தமிழ்நாட்டிற்கு நாளை முதல் மத்திய தொகுப்பில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் வரத் தொடங்கும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மிழகத்துக்கு மேலும் 37 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் புதன்கிழமை முதல் வரவுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு இன்னும் தமிழகத்துக்கு முழுமையாக வழங்கப்படாத நிலையில், சென்னையில் பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள 2ஆயிரம் டோஸ் தடுப்பூசியைக் கொண்டு 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டும் செலுத்தப்பட்டது.

இதேபோன்று ராமநாதபுரம், மதுரை, கோவையிலும் தடுப்பூசி போடும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் ஆர்வத்துடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சேலம் மாவட்டத்தில் கையிருப்பில் உள்ள 80 டோஸ்களை வைத்து சில மையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. மற்ற தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு, தடுப்பூசி வந்தவுடன் போடப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 4-வது நாளாக தடுப்பூசி போடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments