12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்?

0 6749

சிறு, குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக மத்திய நிதியமைச்சரை வலியுறுத்தக் கோரி 12 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கொரோனா முதல் அலையின்போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்டது போல் தற்போது நிவாரணம் அளிக்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

5 கோடி ரூபாய் வரையிலான நிலுவைகளைக் கொண்டுள்ள கடனாளர்களுக்கு குறைந்த அளவு 2021 முதல் 2022 ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்த கூடுதல் கால அவகாசம் தேவை என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments