"கடமையை செய்யும் போலீசார் அச்சுறுத்தப்பட்டால் மென்மை காட்ட முடியாது" -நீதிபதிகள்

0 3122
கொரோனா காலத்தில் போலீசார் அதிக மன அழுத்தத்துடன் பணிபுரிகின்றனர்; கடமையை செய்யும் போலீசார் அச்சுறுத்தப்பட்டால் மென்மை காட்ட முடியாது -நீதிபதிகள்

கொரோனா காலத்தில், போலீசார் கடமையைச் செய்யும்போது, அவர்கள் அச்சுறுத்தப்படும் விவகாரங்களில் மென்மையாக இருக்கப்போவதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.

திருச்சியில் முகக்கவசம் அணியாதது குறித்து கேட்டபோது 5 இளைஞர்கள் போலீசாரை கீழே தள்ளி தாக்க முயன்ற வழக்கில், தேடப்படும் நபர் முன்ஜாமீன் கோரிய வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த கொரோனா நோய் தொற்று காலத்தில், போலீசார் ஏற்கனவே அதிக மன அழுத்தத்துடன் பணி செய்து வருவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

போலீசார் தங்களது பணிகளைச் செய்கிறார்கள் என்றும், ஊரடங்கு காலத்தில் யார் எங்கே செல்கிறார்கள்? என்பது குறித்து கேள்வி எழுப்பினால் தொடர்புடைய நபர் உரிய முறையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

மனுதாரர் காவல்துறையினரிடம் நடந்துகொண்ட விதத்திற்கு மன்னிப்பு கோருவதுடன், இனிமேல் இதுபோன்று நடக்காது என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் அவரை கைது செய்யவும் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments