குடும்ப தகராறில் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை?

0 104917
தமிழன் பிரசன்னா மனைவி நதியா

கொரோனா காலத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமென தமிழன் பிரசன்னா கூறியதால், அவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 திமுகவில் செய்தி தொடர்பு பிரிவின் மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள தமிழன் பிரசன்னா சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கறிஞரான தமிழன் பிரசன்னாவின் மனைவி 35 வயதான நதியா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். பிரசன்னாவின் மனைவி நதியாவிற்கு இன்று பிறந்த நாள் என்று சொல்லப்படுகிறது.

இதனால், தன் பிறந்த நாளை கொண்டாடலாம் என்று நதியா பிரசன்னாவிடம் கூறியுள்ளார், இந்த கொரோனா கால கட்டத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என்று பிரசன்னா மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பிறந்த நாள் அன்று மன வருத்ததில் இருந்த நதியா , வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பியகொடுங்கையூர் போலீசார், தமிழன் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments