தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமானது வரையில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 9008
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்,  நகரின் ஒரு சில பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments