கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

0 2620

கொரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட முடியாது, நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுதொடர்பான இரு வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசின் கொள்கை முடிவு தொடர்பான பெரும்பாலான வழக்குகள் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். மத்திய, மாநில அரசுகள்  செயல்படுத்தி வரும் திட்டங்கள், நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டுமென விரும்புவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

கோவை உள்ளிட்ட பல பகுதிகளிலும், நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதால், குறிப்பிட்ட பகுதிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். ஒருவேளை நடவடிக்கை தேவைப்பட்டால், நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என கூறி இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments